ஜனாதிபதி மஹிந்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் – சரத் என் சில்வா

sarath-mahiஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என முன்ளாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அரசியல் சாசனத்தின் 31-2 என்ற பிரிவின் அடிப்படையில் இரண்டாம் தவணைக்காக ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் மூன்றாம் தவணைக்காக போட்டியிடும் தகுதியை ஜனாதிபதி இழந்துள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply