உலகிலேயே மிகப்பெரிய காது வளையம் ஒன்றை தனது காதுகளில் மாட்டி சாதனை புரிந்துள்ளார் ஹவாய் தீவு பகுதியை சேர்ந்த ஒருவர். அவருக்கு கின்னஸ் சாதனை விருதும் கிடைத்துள்ளது.
ஹவாய் தீவு பகுதியை சேர்ந்த Kala Kaiwi என்பவர் தனது காதுகளில் மிகப்பெரிய வளையங்களை காதணியாக மாட்டி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். எந்தவிதமான அறுவை சிகிச்சையும் இன்றி தனது காதுகளில் 4.3 இன்ச் அளவிற்கு ஓட்டை போட்டு மிகப்பெரிய வளையம் ஒன்றை தனது காதுகளில் பொருத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் தன்னுடைய முகத்தின் பல பகுதிகளில் துளைபோட்டு அதில் சிலிக்கான் அணிகலன்களை பொருத்தியுள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரத்தை சேர்ந்த Kala Kaiwi விமான நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் சோதனையின் போது அதிகாரிகளுக்கு பலவித விளக்கங்களை கொடுக்கும் நிலை தனக்கு இருப்பதாக கூறியுள்ளார். மற்றபடி அந்த ஒன்றைத்தவிர தனக்கு இந்த அணிகலன்களால் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று Kala Kaiwi கூறுகிறார். சிறுவயதில் இருந்தே அணிகலன்களை வித்தியாசமாக அணியவேண்டும் என்ற ஆசை தனக்கு உண்டு என்றும் பலவிதமாக யோசித்ததால் இந்த ஐடியா தனக்கு தோன்றியதாகவும் இவர் கூறுகிறாஅர்.
















