இலங்கையில் இராணுவமயப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இராணுவமயம் என்ற சொல்லுக்கு அகராதியில் போருக்கு விருப்பம் கொள்ளல் அல்லது தயார்ப்படுத்தல் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது.
இதனைதவிர இராணுவமயம் என்ற சொல், அரசியலை தளம்பலடைய செய்யும் ஆயுதம் என்ற முரண்பாட்டு மற்றும் அபாயகரமான அர்த்தத்தையும் கொடுக்கிறது.
இந்த ஆயத்த நிலைக்கு வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமான நிதித்தொகை பாதுகாப்புக்கு ஒதுக்கப்படுவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இலங்கையை பொறுத்தவரை இந்த அனைத்து விடயங்களும் நடந்தேறுகின்றன.
பாதுகாப்பு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் அராஜகம் என்ற அடிப்படையில் அரசியல் முடக்க நிலை ஒன்று வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இலங்கையில் இராணுவமய சமூகம் ஒன்றுக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
















