வாய்மையே வெல்லும் கத்தி படத்திற்கான விசமிகளின் பொய்பிரச்சாரம் தோல்வியில் முடிவடைந்தது !

armurugadasகத்தி படத்திற்கு நெடுமாறன் சீமான் ஆதரவு தெரிவித்தமை கத்தி படத்திற்குள்ள தமிழர்களின் ஒட்டுமொத்தஆதரவினை தெரிவிக்கின்றது.

இத்திரைப்படம் மற்றும் குறித்த நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்த்திரை பிரபலங்கள் தமிழர்பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆதரவாளர்களுக்கெதிராகசிங்கள புலனாய்வு குழுக்கள் மேற்கொள்ளும் இரகசிய நடவடிக்கைகளில் ஒன்றான தமிழ்நாட்டு ஆதரவினைஒடுக்கும் ஓர் நடவடிக்கையாகும் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. கூலிக்கு மாறடிக்கும் சில ஊடகங்கள்மற்றும் கூட்டங்களை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோவது கவலையளிக்கும் ஓர் செயலாகும்.

தமிழ் திரைத்துறை பிரபலங்கள் கூறியதாவது

முருகதாஸ் : சார், நான் மற்ற இயக்குனர்கள் போல் வெறும் பணத்துக்காக படம் பண்ணுபவன் இல்லை, ஒவ்வொருபடத்திலும் ஒரு சமுதாய பிரச்னையை (issue) வைத்து தான் படம் எடுப்பேன். இந்த படத்திலும் ஒரு மெசேஜ்வெச்சிஇருக்கேன், தமிழன் என்ற உணர்வு எனக்கும் இருக்ககுறதுனால தான் சார் ஏழாம் அறிவு படம் எடுத்தேன்.தணிக்கை துறை கட்டுப்பாடுகளையும் மீறி வசனங்களும் பாடல் வரிகளையும் வைத்தேன்.

ஐங்கரன் நிறுவனத்திற்கு தான் நான் படத்த ஒப்பந்தம் செஞ்சேன். எனக்கு பணத்துக்கான காசோலை வரும்போதுதான் பார்த்தன் அதுல லைகா ன்னு இருந்துச்சி, உடனே ஐங்கரன் நிறுவன நிர்வாகி கருணாவ சந்தித்துபேசினேன். ஐங்கரன்-லைகா எல்லாம் ஒன்னு தான் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொன்னாரு.

இந்த லைகா மீதான குற்ற சாட்டுகள் அனைத்தும் சாட்சியமற்ற பொய் குற்றசாட்டுகள், இது தொழில் போட்டியால்கிளப்பிவிட பட்ட அவதூறுகள் என்று கூறினார்கள். அவர்கள் சொன்னப்ப கூட நா முழுசா நம்பள, அப்புறம் அவுங்கஎன்ன சீமான் அண்ணனிடமும், நெடுமாறன் அய்யா விடமும் பேச வைத்தார்கள். அவர்கள் இருவரும் சொன்னபிறகு தான் லைகா தப்பான நிறுவனம் இல்லைன்னு எனக்கு நம்பிக்கையே வந்தது. என்றார் முருகதாஸ்.

மாறன் : சீமான் அண்ணனும் , நெடுமாறன் ஐயாவும் உங்களிடம் என்ன சொன்னார்கள் ?

நெடுமாறன் ஐயாவும் லைகா க்கு படம் பண்ணு ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு தான் சொன்னாரு என்றார்முருகதாஸ்

முருகதாஸ்: சார் இப்போ வரைக்கும் நான் பண்றது இனத்துக்கு எதிரான தப்பு இல்லன்னு என்ன நானே சமாதானம்பண்ணிட்டு தான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

பிரபா: கிளம்புறதுக்கு முன்னாடி உங்க கிட்ட தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி கேக்கணும்.

முருகதாஸ்: கேளுங்க சார்.

பிரபா : ஏழாம் அறிவு படத்துல அந்த காண்பறன்ஸ் (conference scene) காட்சியில நம்ம நாட்ட முன்னேற்றவிடாம தடுத்து வெச்சிருக்கறது ‘Corruption, Recommendation, Reservation’ ன்னு ஒரு dialogue ஸ்ருதிஹாசன் பேசுவாங்க. அதுல Reservation ன்ற வார்த்தை எப்படி சார் வந்துச்சி??

முருகதாஸ்: அதுல ‘Corruption, Recommendation’ மட்டும் தான் நான் சொன்னது , Reservation ஸ்ருதிஹாசனே சேர்த்துகிட்டாங்க.. நானும் சரி நல்லா Rhyming அஹ இருக்கேன்னு விட்டுட்டேன்.

அப்போ அது எனக்கு தப்புனே தெரில அப்புறம் என் நண்பன் ஒருத்தன் வழக்கறிஞரா இருக்கான் , அவன் எனக்குதொலைபேசி பண்ணி என்ன திட்டு திட்டுன்னு திட்டுனான், அப்புறம் தான் நான் பண்ணது தப்புன்னு புரிஞ்சிது.உடனே அந்த வார்த்தையையும் நீக்கிட்டேன்.

பிரபா: சரி இப்போ சொல்லுங்க சார், இடஒதுக்கீட்ட பத்தி இப்போ உங்க கருத்து என்ன ?

முருகதாஸ்: இடஒதுக்கீடு இருக்கலாம் ஆனா உயிர் காக்குற படிப்பு ,மருத்துவ படிப்புல லா இட ஒதுக்கீடு இருக்ககூடாது சார்.

இந்த இடத்தில் முருகதாஸ் (Merit) தகுதி திறமையை பற்றி பேசுகிறார், முருகதாஸ் அவர்களுக்கு புரியும்படி 20நிமிடங்கள் இடஒதுக்கீட்டை பற்றி உதாரணங்களோடு விளக்கிய பிறகு ,

முருகதாஸ்:- இப்போ தான் எனக்கு புரியுது. இந்த மாதிரி யாராவது விளக்கி சொன்னா கேட்டுப்பேன், என்னோடவட்டம் ரொம்ப சின்னது, இந்த மாதிரி சொல்றதுக்கு தான் ஆள் இல்ல. இதே மாதிரி லைகா’வ பத்தியும் முழுவிவரம் ஆதரத்தோட கொண்டுவாங்க நான் உடனே தயாரிப்பாளர மாத்தி விடுகிறேன்.

இவர்களின் இக்கூற்று கத்தி படத்திற்.கெதிராக தமிழ்மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட போலி பிரசாரங்களைதகர்த்தெறிந்துள்ளது.

Tags: , ,

Leave a Reply