இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சரியாக ஒருமாதத்தின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கும், பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
த கார்டியன் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்தின் ஏற்பாட்டில் கடந்த 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 18ம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு தரப்பினரும், இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதன் போது இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதன் போது இலங்கைக்கான ஒத்துழைப்புகளையும் வழங்க பிரித்தானி உறுயளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















