தமிழக மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் – நெடுமாறன்

nedumaranதமிழக மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசியல்வாதி பழ.நெடுமாறன் கோரியுள்ளார்.

இந்திய கடற்படையினர் உரிய முறையில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறினால், ஆயுதங்களையேனும் வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடலில் இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை முறியடிப்பதற்கு, தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசாங்கம் ஆயுத பயிற்சி அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவை மீளவும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

க்சசத்தீவை இலங்கைக்கு வழங்கிய போது ஆட்சியிலிருந்த மத்திய அரசாங்கம், பாராளுமன்றின் அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: ,

Leave a Reply