நாட்டில் சிங்கள பௌத்தர் எனச் சொல்லிக்கொள்ள அஞ்சிய காலமொன்று இருந்ததாகவும் அதனை பலர் மறந்து விட்டதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த மாதத்தை பாதகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனித மக்காவிற்கு யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு நீண்ட தூரம் நடை பயணம்செய்ய வேண்டியுள்ளதாகவும், கத்தோலிக்க பக்தர்கள் தங்களது யாத்திரைத் தளங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வறாhன ஓர் பின்னணியில் இலங்கையில் பௌத்த மதத்தை பாதுகாக்க அரசியல் சாசனத்திலேயே பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
ஏனைய மத வழிபாட்டுத் தளங்களை பாதுகாப்பதற்கும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பௌத்த மதத்தை பாதுகாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















