இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா மாற்றமடைந்துள்ளது – டக்ளஸ்

douglasஇலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா மாற்றமடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து அதிகளவான பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்காவின் பங்களிப்பு முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் சில சலுகைத் திட்டங்களின் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக பாரியளவில் பொருளாதார நலன்களை பெற்றுக்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான இலங்கை மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்புவதாகவும், அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக் காலமாக இலங்கை அமெரிக்க வர்த்தகப் பிரமுகர்களுக்கு இடையிலான உறவுகளில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் மிகவும் நீண்ட காலமாக உறவுகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply