போன வருஷம் இதே நாள்ல… : பிரிந்த பிறகும் ஹன்ஷிகாவை ‘கலங்க’ வைத்த சிம்பு!

simbu-hansihaபோன வருடம் தனது பிறந்த நாளை காதலன் சிம்புவுடன் உற்சாகமாகக் கொண்டாடினார் ஹன்ஷிகா. பதிலுக்கு ஹன்ஷிகாவும் சிம்பு பிறந்தநாளில் நள்ளிரவும் 12 மணிக்கு அவருடைய வீட்டுக்கதைவைத் தட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் சிம்புவுடன் இணைந்து நடித்து போது காதலிக்க ஆரம்பித்தார் ஹன்ஷிகா.

அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த அந்தக் காதலை ஒருகட்டத்தில் அவர்களாகவே ஒப்புக்கொண்டனர்.

ஹன்ஷிகாவுக்கு சிம்புவைப் பிடித்தாலும் அவருடை அம்மாவுக்கு சிம்புவை சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் இந்தக் காதலுக்கு ஹன்சிகாவின் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

மகளின் போக்கிலேயே விட்டுப் பிடித்தார். இதற்கிடையில் தனது சொந்த தயாரிப்பான ‘இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கினார் சிம்பு. இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை எதிர்பார்த்தது போலவே போன வேகத்தில் காதல் கசந்ததையா…மனமும் நொந்ததையா… என்று விசும்பிக்கொண்டு வந்தார்.

மீண்டும் படங்களில் பிஸியானார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி ஹன்சிகாவின் பிறந்த நாள்.

அவருக்கு என்ன கிப்ட் தருவது என்று திணறிக் கொண்டிருக்கிறேன். ஐடியா இருந்தால் சொல்லுங்களேன் என்று ரசிகர்களிடம் தனது ட்விட்டரில் யோசனை கேட்டிருந்தார் சிம்பு. மறுநாள் ஹன்சிகாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய படங்களை தனது ட்விட்டரில் வெளியிட்டார். இந்த பிளாஷ்பேக் நடந்து சரியாக 1 வருடம் ஓடி விட்டது.

கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மீண்டும் தனது பிறந்தநாளை கொண்டாடினார் ஹன்சிகா. ஆனால் இந்த முறை சிம்பு இல்லை. மாறாக தனது அம்மா மோனா மோத்வானியுடன் சிம்பிளாக கேக் வெட்டிக் கொண்டாடினார்.

அப்போது தனது முறிந்த காதலை எண்ணி கண் கலங்கினாராம் ஹன்சிகா.

பிரிஞ்சு போன பின்னாடியும் கண் கலங்க வைக்கிற ஆளுன்னா அது சிம்பு தான் போல…

Tags: ,

Leave a Reply