அரசாங்கமும் – தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டும் – ஐ.நா

un-flagஅரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது,

அரசாங்கத்திற்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுறவை வலுப்படுத்திக் கொள்ள தேவையான ஒழுங்குகளை செய்ய விரும்புவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளது.

இலங்கை தேசிய மனித அபிவிருத்தி அறிக்கை இன்று கொழும்பு பண்டாரநயாக்க நினைவு கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்கத்திற்கும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கம் இடையில் ஒர் பிணைப்பை ஏற்படுத்த இந்த அறிக்கை வழியமைக்கும் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நெண்டி தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை எதிர்கால கொள்கை வகுப்பு மற்றும் திட்டமிடல் நடவடிக்கைகளுக்கு வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ,

Leave a Reply