“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடவடிக்கையில் எமக்கு உடன்பாடு இல்லை என்று ஏற்கனவே நாம் அறிவித்துவிட்டோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக் கைகள் பக்கச்சார்பானவை, அநீதியானவை என்றும் சுட்டிக்காட்டியிருந்ததுடன், அதன் அறிக்கையையும் நிராகரித்திருந்தார்.
இவ்வாறாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் நடவடிக்கையை ஆரம்பம் முதலே நாம் எதிர்த்து வருகின்றோம். அந்த நிலைப் பாட்டில்தான் இன்னமும் உறுதியாக இருக்கின்றோம்.
இந்தநிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவென்பது எமக்குத் தேவையில்லை. எமக்கெதிராக சவால்கள் விடுக்கப்பட்டால் அதை ஏற்போம்.
நாட்டுக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை நாம் செய்வோம். உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது இலங்கைக்கு வெளியே இருந்தவாறு விசாரணைகளை முன்னெடுக்கும் ஐ.நா. விசாரணைக்குழுவினர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பர்.
அப்போது, அந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து அரசு என்றவகையில் என்ன செய்யவேண்டுமோ அதை நாம் சரியாகச் செய்வோம்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
















