இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும், 2013 ல் 1,34, 799 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime Records Bureau), வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நோய்
தீராத நோய் காரணமாக 2011 ல் 26,570 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2013 ல் 26, 426 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வரதட்சணை
வரதட்சணை பிரச்னை காரணமாக 2011 ல் 3,239 பேரும், 2012 ல் 1,935 பேரும், 2013 ல் 2, 267 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
போதை மருந்து
போதை மருந்து உட்கொண்ட பழக்கம் உடையவர்களில் 2011 ல் 3,658 பேரும், 2012 ல் 4, 008 பேரும், 2013 ல் 4,591 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தேர்வில் தோல்வி
தேர்வில் தோல்வியடைந்ததன் காரணமாக 2011 ல் 2,381 பேரும், 2012 ல்2, 246 பேரும், 2013 ல் 2, 471 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்ப பிரச்னை
குடும்ப பிரச்னை காரணமாக 2011 ல் 32, 909 பேரும், 2012 ல் 30, 792 பேரும், 2013 ல் 32, 325 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
காதல் பிரச்னை
காதல் பிரச்னை காரணமாக 2011 ல் 4, 586 பேரும், 2012 ல் 3, 849 பேரும், 2013 ல் 4,495 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வறுமை
வறுமை காரணமாக 2011 ல் 2, 282 பேரும், 2012 ல் 2, 291 பேரும், 2013 ல் 1, 866 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
வேலை இல்லா பிரச்னை
வேலை இல்லா பிரச்னை காரணமாக 2011 ல் 2, 333 பேரும், 2012 ல் 1,731 பேரும், 2013 ல் 2, 090 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
நெருங்கிய உறவினர்களின் மரணம்
நெருங்கிய உறவினர்களின் மரணத்தால் மனமுடைந்து 2011 ல் 896 பேரும், 2012 ல் 819 பேரும், 2013 ல் 996 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சமூக மதிப்பு குறைந்ததால்
சமூகத்தில் மதிப்பு குறைந்ததன் காரணமாக 2011 ல் 1, 160 பேரும், 2012 ல் 981 பேரும், 2013 ல்1, 466 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி
கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி காரணமாக 2011 ல் 2, 983 பேரும், 2012 ல் 2, 357 பேரும், 2013 ல்2,678 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
















