இந்தியாவில் கைதுசெய்யப்பட்டிருந்த 16 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவ் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கம் இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
















