இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த மீர் மசூத் அலி என்பவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடக்க ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்கடந்த 7 ஆம் திகதி மணமகன் மணமகளை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றிருந்தார் அப்போது மணமகள் தனது கைகளில் மருதாணி வைத்து கொள்ளாமையினால் தமது திருமணத்தை நிறுத்துமாறு மணமகன் கோபமாக தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மணமகள் வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன்,பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மணமகளின் வீட்டார் மணமகன் கேட்ட வரதட்சணையை ஏற்கனவே கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
















