மலேசிய விமானம் MH 370 பயணிகளின் வங்கிக்கணக்குகளில் பணம் எடுத்தது யார்? திடுக்கிடும் தகவல்

malaysia-flightகடந்த மார்ச் 8ஆம் தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய மலேசிய விமானம் MH 370 மர்மமான முறையில் காணாமல் போய் அதில் பயணம் செய்த 239 பயணிகளும் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் தற்போது அதில் பயணம் செய்த பயணிகளின் பேங்க் அக்கவுண்டில் இருந்து பணம் திரும்பப்பெற்றுள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வங்கி அதிகாரிகளும் போலீஸார்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MH 370 விமானத்தில் பயணம் செய்த மூன்று பயணிகளின் அக்கவுண்ட்டுகளில் இருந்து நான்காவது பயணியின் அக்கவுண்ட்டுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் நான்காவது பயணியின் அக்கவுண்ட்டில் இருந்து ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த பரிமாற்றம் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி நடந்ததாக தெரியவந்துள்ளது.

MH 370 விமானம் கடத்தப்பட்டதாகவும் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பணயக்கைதிகளாக இருப்பதாகவும் ஒருசாரார் கூறிவரும் நிலையில் கடத்தல்காரர்களிடம் இருந்து ஒருசிலர் தப்பி, பின்னர் தங்கள் தேவைக்கு பணம் எடுத்தார்களா? என்ற கோணத்தில் மலேசிய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பயணிகளின் வங்கிக்கணக்கு விபரங்கள் தெரிந்த மர்ம நபர்கள் இதுபோன்ற முறைகேடு செய்கின்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பின்னர் மற்ற பயணிகளின் வங்கிக்கணக்குகள் அனைத்தையும் கண்காணிக்கவும், அவர்களுடைய அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக அதுகுறித்து தகவல் கொடுக்கவும், வங்கிகளுக்கு மலேசிய போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply