கல்லூரி மாணவியின் உள்ளாடைக்குள் £16,000. இங்கிலாந்து விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி.

uk-girlஇங்கிலாந்து விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் £16,000 பணத்தை கடத்தி சென்றதாக கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் ஒருமாத கால விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இங்கிலாந்தில் உள்ள நவால் மசாத் என்ற 27 வயது பெண் பகுதிநேர பாடகியாக இருந்துகொண்டே கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் ஹீத்ரு விமான நிலையத்தில் வந்தபோது அவர் தன்னுடைய உள்ளாடையில் £16,000 பணத்தை மறைத்து வைத்துக்கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தன்னுடைய காதலர் கொடுத்த பணத்தைத்தான் எடுத்து சென்றதாக தெரியவந்தது. அவர் சிரியா தீவிரவாதிகளுக்கு பணம் எடுத்து செல்வதற்காக செல்வதாக சந்தேகம் அடைந்த போலீஸார் கைது செய்ததாகவும், ஆனால் உண்மையில் அப்பாவி என்றும் தெரியவந்ததால் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

தன்னை நிரபராதி என்று நிரூபிக்க உதவிய தனது குடுமத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நவால் மசாத் தனது நன்றியை இன்று தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply