சந்திரபாபு நாயுடு பாணியில் கட்சியை கைப்பற்ற நினைக்கும் ஸ்டாலின். அதிர்ச்சியில் கருணாநிதி

karunanidhi_stalinஎன்.டி.ராமராவிடம் இருந்து கட்சியை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடுவின் தந்திரத்தை பயன்படுத்த மு.க.ஸ்டாலினி துணிந்துவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணநிதிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் கட்சியை கட்டுப்பாட்டுடன் நடத்த தவறிய கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஸ்டாலின் ஆலோசனையால் எழுதப்பட்டது என்றே பலர் கூறுகின்றனர்.

என்.டி.ராமாராவ் இருக்கும்போதே சந்திரபாபு நாயுடு கட்சியைக் கைப்பற்றியதுபோல ஸ்டாலின் ஆட்கள் அதற்கான திட்டங்களை இப்பொழுதே வகுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டன’ என்று திமுகவினர் வெளிப்படையாக சொல்லி வருவதால் கருணாநிதி கலக்கத்தில் இருக்கின்றார்.

ஸ்டாலினைப் புகழ்ந்தும் கருணாநிதியை விமர்சித்தும் தி.மு.க-வினர் சிலரே இணையதளங்கள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் சர்ச்சை கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இவர்களை ஒன்றுசேர்க்கும் காரியங்களை ஸ்டாலினைச் சுற்றியிருக்கும் சிலரே பார்த்து வருகிறார்கள் என்ற தகவலும் கருணாநிதி கவனத்துக்குப் போனது.

ஸ்டாலினுக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவியும் பொருளாளர் பதவியும் இருக்கிறது. துணை முதல்வராக ஆக்கினேன். ‘தலைவர் தேர்தல் வந்தால் ஸ்டாலின் பெயரை நானே முன்மொழிவேன்’ என்றும் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்யமுடியும்? என்று புலம்பி வருகிறாராம் கருணாநிதி.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் முழுப்பொறுப்பையும் கொடுத்தேன். வேட்பாளர் தேர்வு முதல் பிரசாரம் வரை திட்டமிடாததால் தோல்விதான் கிடைத்தது. என்னால் எதுவும் செய்ய முடியாது என்பதற்காக இந்தப் பொறுப்புகளைக் கொடுக்கவில்லை. என்னால் செயல்பட முடியும். படுத்துக்கொண்டே ஆட்சியை நடத்தினார் எம்.ஜி.ஆர். பாபா ஆம்தே படுத்துக்கொண்டே பொதுச்சேவை செய்தார். பெரியாரை நாமே பார்த்தோம். அதனால் என்னாலும் சிறப்பாக செயல்பட முடியும்’ என்று கர்ஜித்து வருகிறாராம் கருணாநிதி

எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கொண்டே இருப்பது, இப்பொழுதே கட்சியை கைப்பற்ற வேண்டும், இல்லையெனில் கட்சி கனிமொழியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என ஸ்டாலினுக்கு ஒரு முக்கிய திமுக பிரமுகர் கூறிய ஆலோசனைக்கு பின்னரே இந்த அதிரடி முடிவை ஸ்டாலின் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply