செயற்கை மார்பகங்களின் உள்ளே $120,000 மதிப்புள்ள கோகைன் கடத்திய பெண் அதிரடி கைது

woman-smuggles-cocaine-in-her-breastsசெயற்கை மார்பகங்களின் மூலம் $120,000 மதிப்புள்ள கோகைன் என்ற போதைப்பொருளை கடத்திய 43 வயது பெண் ஒருவர் Madrid விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஸ்பெயின் தலைநகர் Madrid நகரில் உள்ள விமான நிலையத்தில் 45 வயது வெனிசுலா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்ததை பார்த்த கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சோதனை செய்தபோது அவருடைய மார்பகங்கள் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தனர். பின்னர் பெண் காவல்துறை அதிகாரிகளின் மூலம் சோதனை செய்ததில் அவருடைய இரண்டு மார்பகங்களும் செயற்கையாக ஒட்ட வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.

பின்னர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று செயற்கை மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பார்த்தபோது, இரண்டு மார்பகங்களின் உள்ளே 1.7 கிலோ கோகைன் இருந்ததை கண்டுபிடித்தனர். இவற்றின் மதிப்பு $120,000 ஆகும். பின்னர் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் கொலம்பியா நாட்டின் Bogota என்ற நகரில் இருந்து வருவதாகவும், தன்னை அனுப்பிய போதைப்பொருள் கும்பல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னை கட்டாயப்படுத்தி இந்த வேலையை செய்ய சொன்னதாகவும் கூறினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஸ்பெயின் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply