கடந்த இரண்டு மாதங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை தன் வசப்படுத்த வேண்டும் என விஜய் செய்த தில்லுமுல்லுகள் ஏறாலம். அவை அனைத்தையும் நம்முடைய இணையத்தில் ஏற்கனவே புட்டுபுட்டு வைத்துள்ளோம். அதில் ஒன்று தான் ஆகஸ்ட் 15-ம் தேதி மதுரையில் ரசிகர்களும், குமுதம் பத்திரிக்கையும் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டதை கொடுக்க போகிறோம், இதற்காக பெரிய விழாவே எடுக்க உள்ளோம் எனக் கூறியது. இதற்காக நடிகர், நடிகையின் கால்களில் விழுந்து கெஞ்சாத குறையாக அவர்களுக்கு விஜய் அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளியாகின. இன்று ஆகஸ்ட் 15, சுதந்திர தின விழா நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இன்று நடப்பதாக சொன்ன அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு விழா மட்டும் நடைபெறவில்லை.
சுதந்திர தினம் என்பதால் தமிழக அரசு விழாவிற்கு பாதுகாப்பு அளிக்கமுடியாது என கூறிவிட்டதாம். மேலும் விழாவிற்கு கட்டாயம் வருகின்றோம் என்று சொன்ன நடிகர், நடிகைகளும் கடைசி நிமிடத்தில் வர மறுத்துவிட்டனராம். இதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு விழாவை கைவிட்டு விட்டார்களாம் விழா குழு. சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவை பெற்ற தாய் என அதிமுக அமைச்சர்களை விட புகழ்ந்து தள்ளினார் விஜய். ஆனாலும் ஜெயலலிதாவின் மனசு விஜய் விவகாரத்தில் குளிரவில்லை போல. விஜய்யை வளர்த்து விட்டால் பின்னால் அது தலைவலியாக மாறிவிடும் என ஜெ. நினைப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே தான் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் கத்தி படத்திற்கு மாணவ அமைப்புகள் வலுவான போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் முதலில் படத்தை ரிலீஸ் செய்து விடலாம் மத்தவைகளை பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விஜய் பதுங்கிவிட்டாராம். தற்பொழுது மாணவர்கள் போராட்டத்தை திசை திருப்புவதற்கு தன்னுடைய கல்லூரி மாணவ ரசிகர்களை தூண்டிவிட்டுள்ளாராம் விஜய். மாணவர்களுக்குள்ளேயே பிரிவினையை தூண்டி விட்டுள்ளார் விஜய். கத்தி விவகாரம் தலைவா விவகாரத்தை விட விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
















