தாயைக் கொன்று சூட்கேசில் போட்டுவிட்டு: பாய் பிரண்டுடன் சென்று தண்ணியடித்தபெண்.

deadதனது சொந்த தாயை வெட்டிக் கொலைசெய்து, ஒட்டுத் துணிகூட இல்லாமல் அவரை வெட்டி ஒரு சூட்கேசில் போட்டுள்ளார் 19 வயது மாக் என்னும் பெண்.

19 வயதாகும் குறித்த இப் பெண் தனது காதலனுடன்(21) இணைந்து இக் கொலையைச் செய்துள்ளார். இந்தோனேசியாவுக்கு சென்றவேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என மேலும் அறியப்படுகிறது. இப் பெண் அவர் காதலன் மற்றும் தாய் ஆகியோர் ஒரு விடுதியில் தங்கியிருந்தவேளை, தாயைக் கொலைசெய்து சூட்கேசில் அவர் போட்டுள்ளார். இவ்விடையம் வெளியில் தெரிய வராது என்று நினைத்து அவர்கள் இருவருமாக கழியாட்ட விடுதிக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக விடுதியில் வேலைபார்பவர் ஒருவர் இதனைக் கண்டறிந்துவிட்டார். இந்தோனேசிய பொலிசார் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மிகவும் கடுமையான விசாரணைக்குள் இவர்களை உள்ளாக்கியுள்ள இந்தோனேசியப் பொலிசாருக்கு அதிர்சி தான் காத்திருந்தது. இவர்கள் இருவருமே எதனையும் தெரிவிக்க வில்லை என்பது ஒருபுறம் இருக்க, பெண்ணும் அவரது காதலனும் விசாரணை நடைபெறும்போது பகிடி அடிப்பதும், சிரிப்பதுமாக உள்ளார்கள்.

இதனால் பொலிசார் ஆடிப்போயுள்ளார்கள். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஒருவர் இப்படி நடப்பாரா என்று அவர்கள் ஆடிப்போயுள்ளார்கள். தாயைக் கொலைசெய்த இந்த இருவரும், சூட்கேசை எடுத்துச் சென்று எங்காவது எறியவே முயற்சி செய்திருப்பார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இது நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் தாயார் கொலைசெய்யப்பட்டால், அங்கே யாரும் விசாரிக்க மாட்டார்கள். தாம் பின்னர் இலகுவாக அமெரிக்காவுக்கு சென்றுவிடலாம் என்று இவர்கள் நினைத்திருக்கிறார்கள்.

Tags: , ,

Leave a Reply