கத்தி படத்துக்கு மாணவர் அமைப்புகள் மற்றும் சீமான் ஆதரவு !

Kaththi-posterவிஜய் – சமந்தா ஜோடியாக நடிக்கும் கத்தி படத்துக்கு மாணவர் அமைப்புகள் மற்றும் சீமான் ஆகியோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவானது என பல சர்ச்சைகள் கிளப்பப்பட்டது.

அந்த சிக்கலை சரிகட்ட, எதிர்ப்பு காட்டிய கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வந்தனர் முருகதாஸும் விஜய்யும். லைக்கா நிறுவனம் இலங்கை தமிழருக்கு சொந்தமானது என்றும் ராஜபக்சேவுடன் எந்த தொடர்பும் கிடையாது என்றும் படக்குழு விளக்கம் அளித்தது. இந்த நிலையில் நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் இப் பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். லைகாவை எதிர்த்துப் போராட மாட்டேன் என்று கூறிவிட்டார் சீமான்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சில மாணவர்கள் ஒன்று திரண்டு, விஜய்யை நேரில் போய்ச்சந்தித்து படத்துக்கு தங்களின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தனர். மேலும் சீமானை செவ்விகண்டபோது அவர் தெரிவித்ததாவது இங்கு ஒலிவடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிங்கள அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் சில கூலிக்குழுக்களே தமிழ் மக்களுக்காதரவான நிறுவனங்கள் மீது குற்றம்சாடி அவர்களை தமிழ் மக்களுக்கெதிராக திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பிருத்தானியாவில் செயற்பட்டுவரும் ஒட்டுக்குழுக்களே இந்தியாவில் உள்ள ஒருசில சமுதாயத்திற்கு புறம்பாக நடந்துவரும் ஒரிருவர்களுக்கு பணத்தினை அனுப்பி தமிழாதரவு நிறுவனங்கள் மீதும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவும் நிறுவனங்கள் மீதும் இவ்வாறான துர்பிரச்சாரங்கள் செய்யுமாறு பணித்தமை ஆதாரங்களுடன் எமது ஊடகத்திற்கு தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சரியான சந்தர்ப்பத்தில் அனைத்து விபரங்களும் ஆதாரத்துடன் வெளியிடப்படும்..

குறிப்பு – கத்தி படத்துக்கு மாணவர் அமைப்புகள் மற்றும் சீமான் ஆதரவு என்று செய்தி பல இந்திய முன்னணி ஊடகங்களான ஒன்இந்தியா, மாலைமலர் போன்றவற்றில் வெளிக்யாகியுள்ளது.

Tags: , , , ,

Leave a Reply