மார்ச் 16, 2880 அன்று உலகம் அழிகிறது. பூமியை நோக்கி வரும் மாபெரும் விண்கல். விஞ்ஞானிகள் அதிர்ச்சி.

asteroid-earth-destroyபூமியை நோக்கி மாபெரும் விண்கள் ஒன்று மிக வேகமாகவந்து கொண்டு இருப்பதாகவும், அந்த விண்கல் பூமியின் மீது மோதும்போது கண்டிப்பாக பூமியில் உள்ள மனித குலங்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் அழிந்துவிட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த விண்கல்லை எப்படி தடுத்து நிறுத்துவது என்று விஞ்ஞானிகளுக்கு இன்றுவரை தெரியவில்லை.

1950 DA என்னும் மாபெரும் விண்கல் ஒன்று நட்சத்திர கூட்டத்தில் இருந்து தோன்றி மிகவேகமாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. அந்த விண்கள் இதே வேகத்தில் வந்தால் சரியாக 2880ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். அதாவது பூமி அழிய இன்னும்க 867 வருடங்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கிலோமீட்டர் விட்டமுள்ள இந்த விண்கள் 44,800 மெகா டன் எடையுள்ளதாக இருக்கின்றது என்றும், இவ்வளவு பெரிய விண்கள் பூமியை தாக்கினால் கண்டிப்பாக பூமி தாங்காது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த விண்கள் பூமிய நோக்கி வினாடிக்கு 15 கிமீ என்ற வேகத்தில் தற்போது வந்துகொண்டிருக்கின்றது. இந்த விண்கள் கடலில் விழுந்தால் இதுவரை ஏற்படாத அளவில் மாபெரும் சுனாமி தோன்றும் என்றும் அவ்வாறு தோன்றும் சுனாமி உலகையே அழித்துவிடும் என்றும் கூறப்படுகிறது. பூமியை நெருங்கும் முன்பே அந்த விண்கல்லை அழிப்பது அல்லது திசைதிருப்புவது எப்படி என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply