ஒரே ஊரில் பத்து மனைவிகளுடன் குடும்பம் நடத்தியவன் ஃபேஸ்புக் இணையதளத்தால் பிடிபட்டான். அமெரிக்காவில் பரபரப்பு.

south-carolinaஅமெரிக்காவில் உள்ள ஒரு பெண் தனது கணவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் ஆகி குழந்தைகள் இருப்பதை ஃபேஸ்புக் மூலம் கண்டுபிடித்ததால், தற்போது அந்த கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றார்

அமெரிக்காவில் உள்ள South Carolina என்ற பகுதியை சேர்ந்த Darnell Pixley என்பவரின் மனைவி ஃபேஸ்புக்கில் தன்னுடைய திருமண புகைப்படத்தை பதிவு செய்தார். இந்த புகைப்படத்தை பார்த்த மூன்று பெண்கள் இவர் தங்களுடைய கணவர் என்றும் கூறி அவர்களும் தங்களுடைய திருமண புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர். நான்கு பெண்களூம் ஃபேஸ்புக்கிலேயே சாட்டிங் செய்து Darnell Pixley தங்களை ஏமாற்றியிருப்பதை அறிந்து ஆத்திரம் அடைந்தனர். மேலும் நான்கு பேர்களும் ஒரே ஊரிலேயே வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் அறிந்து, பின்னர் நான்கு பெண்களும் ஒன்றுசேர்ந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

நான்கு பெண்களின் புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், Darnell Pixley அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு மேலும் ஒருசில பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரே பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் குடும்பம் நடத்திக்கொண்டு இருப்பதை கண்டுபிடித்த போலீஸார், அவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்த பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் பல திருமணங்கள் செய்து கிளுகிளுப்பாக வாழ்ந்துவந்த Darnell Pixley தற்போது சிறையில் இருக்கின்றார்.

Tags: , ,

Leave a Reply