அரசாங்கத்திற்கு எதிரான அமைச்சர்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளை விமர்சனம் செய்து வரும் அமைச்சர்கள் தொடர்பில் அறிக்கை தயாரிக்குமாறு கோரியுள்ளார்.
விரைவில் தேசிய ரீதியான தேர்தல் ஒன்று குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் ஜனாதிபதி இவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில அமைச்சர்கள் பகிரங்கமாகவே அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, சில அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் ஆளும் கட்சி தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
















