லக்ஷ்மி மேனன் கதாநாயகியான கதை தெரியுமா உங்களுக்கு? கேரளாவில் இருந்து வந்து தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை லக்ஷ்மி மேனன். பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் அவரை தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நம்ம ஊர் மன்மத ராசாக்களுக்கு பிடித்த லக்ஷ்மி மேனன் நாயகியான கதையை பார்ப்போம்.
ரகுவின்டே சொந்தம் ரசியா என்ற மலையாள படத்தில் ஒரு காட்சியில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து விட்டு சென்றார் லக்ஷ்மி மேனன்.
அப்படி கூட்டத்தோடு கூட்டமாக வந்த லக்ஷ்மி மேனனை அடையாளம் கண்ட மலையாள இயக்குனர் அலி அக்பர் அவரை தனது ஐடியல் கபுள் படத்தில் ஹீரோயினாக்கினார்.மலையாள படத்தில் ஹீரோயினான கையோடு லக்ஷ்மிக்கு சுந்தரபாண்டியன், கும்கி ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சுந்தர பாண்டியன் படத்திற்காக லக்ஷ்மி மேனனுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.
லக்ஷ்மி மேனன் மஞ்சப்பை, சிப்பாய், பாண்டியநாடு, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்
















