திட்டம் போட்டு ஹன்சிகாவை ‘ஃபிளைட்’டை மிஸ் செய்ய வைத்த ‘பவர்’ ஹீரோ

hansika-5600ஹன்சிகா ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தை பவர் பட ஹீரோ ரவி தேஜாவால் மிஸ் பண்ணியுள்ளார். ஹன்சிகா ரவி தேஜாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பவர். இந்த படத்தில் வரும் ஒரு பாடலை ஹைதராபாத்தில் படமாக்கினர். படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை கிளம்ப விமானத்தில் டிக்கெட் புக் செய்தார் ஹன்சிகா. ஹன்சிகாவை பிரிய மனமில்லாத பவர் குழு ஒரு திட்டமிட்டு செயல்படுத்தியது.

ஹன்சிகாவை மேலும் ஒரு நாள் ஹைதராபாத்தில் தங்க வைக்க அவர் விமானத்தை மிஸ் பண்ண திட்டமிட்டு செயல்படுத்தினர் இயக்குனர் பாபி, ரவி தேஜா மற்றும் ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா.

பாபி, ரவி, நீரஜா போட்ட திட்டம் வெற்றி பெறவே ஹன்சிகா விமானத்தை மிஸ் செய்தார். இது குறித்து அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விமானத்தை மிஸ் செய்தாலும் ஹன்சிகா அது குறித்து யார் மீதும் குறை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பவர் படத்தில் ஹன்சிகா தவிர ரெஜினா கசான்ட்ராவும் உள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படத்தில் ரவி தேஜா போலீசாக வருகிறார்.

Tags: , ,

Leave a Reply