இராமேஸ்வரத்தில் பலாத்காரத்தால் தத்தளித்த அமெரிக்கப்பெண்.

usa-women -repதமிழகம் இராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்து கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர் என்ற சந்தேகத்தில் மூன்று இளைஞர்கள் தங்கச்சிமடம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்துக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இருவர் சுற்றுலா வந்தனர்.

இவர்கள்ஞாயிற்றுக்கிழமை மாலை தங்கச்சிமடம் அருகே உள்ள தண்ணீர் ஊற்று கடலில் குளித்துக் கொண்டிருந்த சமயம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அமெரிக்க பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற பிரான்ஸ் நாட்டவரையும் அவர்கள் தாக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய வெளிநாட்டவர்கள் தங்கச்சிடம் காவல்நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தஞ்சமடைந்தனர். இதன் பின் அவர்கள் கொடுத்த முறைப்பாட்டின்படி, அந்த மூன்று நபர்களையும் பொலிஸார் கைதுசெய்தனர். முன்னர் வழக்கை பதிவுசெய்ய பொலிஸார் மறுத்தனர் என்றும், பின்னர் இரவு 8.30 மணியளவில் வழக்கை ஏற்றுக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply