சுப்பிரமணிய சுவாமிகள் யாழிற்கு இரகசிய விஜயம்!– சம்பந்தனை மோடி சந்திக்க மஹிந்தவின் அனுமதி வேண்டும்: சுவாமி.

subramanianswamyஇலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள சுப்ரமணிய சுவாமிகள் இரகசியமாக யாழ் குடாநாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டிற்கு விஜயத்தை மேற்கொண்டேன் என தனது சுயவிளம்பரத்தை அதிகரித்துக் கொள்வதற்கே இவ்வாறான இரகசிய விஜயத்தை சுப்பிரமணிய சுவாமிகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். சுப்பிரமணிய சுவாமிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்வதால் தமிழ் மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் ஏற்பட போவதில்லை.

குடாநாட்டிற்கு சென்றேன் என தனது சுயவிளம்பரத்தை அதிகரிப்பதற்கான ஒரு நாடகமாகும். இவரின் அண்மைய செயற்பாடுகளை இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் சரி, தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் சரி நன்கு அறிவார்கள். அவர் இலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர் போலவே அண்மைக் காலங்களில் செயற்பட்டு வருகின்றார். இவருடைய யாழ்ப்பாண விஜயம் குறித்து இலங்கை அதிகாரிகள் தவிர வேறு யாருக்கும் தெரியாது என அவர் மேலும் தெரிவித்தார். சம்மந்தனை மோடி சந்திக்க மஹிந்த அனுமதி அளிக்க வேண்டுமாம்: சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசு அனுமதி அளித்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இந்தியப் பிரதமர் சந்திப்பார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய இராணுவத்தினரின் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க கொழும்பு சென்ற சுப்பிரமணியன் சுவாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வழக்கமாக, எந்தவொரு நாட்டு அரசாங்கத்துடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் தரப்புகளுடனான சந்திப்புகளை நாம் ஊக்குவிப்பதில்லை. தற்போதைய பிரதமர், சந்திப்புக்கான நியமனங்களை இலகுவாக வழங்குவதில்லை. இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் செயல்முறைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

அந்த செயல்முறைகளைப் பலவீனப்படுத்தும், எந்த நடவடிக்கையையும் இந்தியா மேற்கொள்ளாது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நேரத்திலும் வந்து பிரதமரைச் சந்திப்பதற்கு கடந்தமுறை போல இப்போது இருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply