அமெரிக்க பத்திரிகையாளரை கொலை செய்து ஒபாமாவுக்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள். அதிர்ச்சி தகவல்

irag-photoதங்கள் மீது அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்குதல் நடத்திய தாக்குதலுக்கு பழி வாங்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி ஒருவர் வெளியிட்டுள்ள திடுக்கிடும் வீடியோ ஒன்று அமெரிக்க நாட்டையே குலுக்கியுள்ளது. அந்த வீடியோவில் காணாமல் போன அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்யும் வீடியோவும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக் நாட்டிற்கு எதிராக போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்காவின் போர் விமானங்கள் தீவிரவாதிகளின் நிலைகளை நோக்கி குண்டுமழை பொழிந்து வருகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஈராக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு போட்டோகிராபராக பணிபுரிந்து வரும் James Wright Foley என்பவரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்துள்ளனர். கொலை செய்யும் முன் தன்னுடைய மரணம் இராக்கிற்கு ஒபாமா அமெரிக்க படைகளை அனுப்பியதாலே ஏற்பட்டது என்று அவரை தீவிரவாதிகள் பேச வைத்துள்ளனர்.

போட்டோகிராபரை கொலை செய்தபின்னர் அந்த வீடியோவில் முகமூடி அணிந்த தீவிரவாதி ஒருவர் ஆங்கிலத்தில் பேசும்போது, “ஈராக்கில் இருந்து விடுதலை பெறுவதற்காக சுதந்திர போராட்டம் நடத்தி வரும் எங்கள் மீது ஒபாமா நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கு நடவடிக்கையாக இந்த போட்டோகிராபரை கொலை செய்ததாகவும், இத்துடன் தாக்குதலை ஒபாமா நிறுத்தாவிட்டால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இன்னொரு அமெரிக்க பத்திரிகையாளரான Steven Joel Sotloff என்பவரையும் கொலை செய்வோம்” என்று மிரட்டலுடன் பேசியுள்ளர்.

இந்த வீடியோவை சமூக இணையதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வெளியானதில் இருந்து அமெரிக்க அரசும் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈராக் தீவிரவாதிகள் தாக்குதல் தொடருமா? அல்லது நிறுத்தப்படுமா? என்பது குறித்து அமெரிக்க மக்களிடையே பெரும் பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.

Tags: , ,

Leave a Reply