ரஷ்யாவில் உள்ள இசை ஆசிரியை ஒருவர் தன்னுடைய நிர்வாண படத்தை சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று அவருடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் ராஜினாமா செய்ய மறுத்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள Elena Kornyshonkova, என்ற 40 வயது ஆசிரியை ஒருவர் Tver, என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இசை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டலில் தனக்கு தானே நிர்வாண புகைப்படம் ஒன்றை எடுத்து, அதை ரஷ்யாவின் பிரபல சமூக வலைத்தளமான VKontake என்ற இணையதளத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தை அவருடைய நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி பதிவு செய்வதற்கு பதிலாக, தவறுதலாக அனைவரும் பார்க்கும்படியான ஆப்சனை தேர்வு செய்துவிட்டார். இதனால் அந்த புகைப்படத்தை அவருடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பார்த்து அருவருப்பு அடைந்துள்ளனர்.
இதையடுத்து அவர் தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும பள்ளி நிர்வாகம் உள்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரிடம் கண்டிப்பாக கூறினர். ஆனால் Elena Kornyshonkova, அவர்கள் ‘சமூக வலைத்தளத்தில் படங்களை பதிவு செய்வது தன்னுடைய தனிப்பட்ட உரிமை என்றும் அதற்காக தன்னை வேலையை ராஜினாமா செய்யச்சொல்ல யாருக்கும் உரிமை இல்லை’ என்று கூறி ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். இதனால் அந்த பள்ளி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
















