இந்தியாவை உலக வல்லரசாக்க பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்: மோடி

narendra-modi5இந்தியாவை உலக வல்லரசாக்க, பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இன்று (20ஆம் தேதி) நடந்த பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ”உலகம் மாறிக்கொண்டு இருப்பதைப் போல், போர் முறைகளும் மாறிக் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தொழில் நுட்பம் என்பது ஒரு முக்கிய கருவியாக மாறியிருக்கிறது.

இந்தியாவை உலக அளவிலான வல்லரசு நாடாக்க வேண்டும். இந்த உலகம் 2020ல் செய்ய நினைப்பதை, நாம் 2018லேயே செய்து முடிக்க வேண்டும். அதற்காக நமது விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அதிலும், பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.

Tags: ,

Leave a Reply