இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்தாலும் யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடைபெறும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசா மறுப்பு அறிவிப்பு குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர் ஸ்கைப், செய்மதிபுகைப்படங்கள், இணைய தொலைபேசிகள் போன்ற நவீன வசதிகளை பயன்படுத்தி தனது குழுவால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
சுpரியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும் தனது குழுவினர் நம்பகத்தன்மை வாய்ந்த அறிக்கையொன்றை முன்வைத்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர் இலங்கை விடயத்திலும் இது சாத்தியமே என குறிப்பிட்டுள்ளார்.
















