எஸ்.ஆர்.எம்.கல்வி வியாபாரி பச்சைமுத்துவின் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள புலிப்பார்வை படத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இளம் போராளியாய் சித்தரித்துள்ளனர்.
இலங்கையில் எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனத்தைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பச்சைமுத்து, ராஜபக்சேவை சந்தோஷப்படுத்துவதற்காகவே இப்படி ஒரு தவறான காட்சிகள், கருத்துகளைக் கொண்ட படத்தைத் தயாரித்துள்ளதாக தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் கோபக்குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
மாணவர்கள் தொடங்கி வைத்த இந்த புலிப்பார்வை எதிர்ப்புப் போராட்டத்துக்கு 80க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக புலிப்பார்வை படம் தமிழ்நாட்டில் வெளி வர வாய்ப்பே இல்லை என்ற இக்கட்டான நிலை உருவானது. அது மட்டுமல்ல, மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக புலிப்பார்வை படத்தை தமிழக அரசே தடை செய்யக் கூடிய சூழ்நிலையும் உருவாகி உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் புலிப்பார்வை படத்தை காப்பாற்ற அவசர அவசரமாக கூடி ஒரு முடிவை எடுத்துள்ளனர் பச்சைமுத்துவும், அவரது சகாக்களும்.
இந்த அவசர முடிவுக்குப் பின்னால் புதிய பச்சோந்தியாக அடையாளம் பெற்றிருக்கும் சீமான் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதாவது, பாலச்சந்திரன் புலிகளின் சீருடையை அணிந்திருப்பதுதானே பிரச்சனை? அதை கிராபிக்ஸ் மூலம் அகற்றிவிடுகிறோம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
புலிப்பார்வை படத்தை பார்த்த நெடுமாறனின் கருத்துப்படி 70 சதவிகித காட்சிகள் ஆட்சேபத்துக்குரியவை.
ஆக…அந்தக்காட்சிகளை எல்லாம் அகற்றாமல் வெறுமனே பாலசந்திரனின் சீருடையை மற்றும் கிராபிக்ஸ் மூலம் மாற்றிவிட்டால் தமிழ் இன உணர்வாளர்கள் சமாதானமடைந்துவிடுவார்கள் என்று நம்புகிற இவர்களை என்ன வென்று சொல்வது?
















