”நான் இதைச்சொல்கிறேன் அவர்கள் என்னைக்கொல்லலாம் எனது குரலை நசுக்க முடியாது. செய்தி கொண்டு வருபவனை கொல்லலாம் செய்தியை கொல்ல முடியாது.
நாட்டிடம் இருந்து மன்னிப்புக்கோர வேண்டியவர்களின் கால்களில் வீழ்ந்து நான் மன்னிப்புக்கோரமாட்டேன். ஜனநாயகம் என்பது வலுவானவர்களுக்கான அதே வாய்ப்பை பலவீனமானவர்களுக்கும் வழங்குவது என நான் புரிந்து கொள்கிறேன்.” என்று மாகாத்மா காந்தி ஒரு முறை தெரிவித்தார்.
எமது அரச அமைப்பில் பொதிந்துள்ள ஆட்சிக்கான தகுதி இதுவே. புத்தர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இதனை போதித்தார். நாங்கள் இந்த இலக்கிற்காக பாடுபட வேண்டும் என்றால் அதற்காக தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும் என்றால் அதற்கான ஒரு விலையை செலுத்த வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. அது ஒரு விலையா அல்லது பெரிய தியாகமா என்பது எங்களுக்குத் தெரியாது.
உபுல்ஜெயசூர்ய- ரஜிபன்
அவர்கள் என்னைக் கொல்லலாம் எனது குரலை நசுக்க முடியாது. ஜூலை 15ம் தேதி எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகி வரும் விடயங்கள் குறித்து நான் போலீஸில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு எனக்கு பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடியது. போலீஸ் சட்டத்தின் 22 பிரிவின் கீழ் பல தடைவைகள் பொதுமக்களுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, வனாத்தமுல்ல பகுதியில் கொல்லப்பட்டவர் ஒருவரின் சகோதரரிற்கு 6 போலீஸார் பாதுகாப்பு வழங்கிய சம்பவமொன்றுள்ளது.
எனினும் 15000 இற்க்கும் மேற்பட்டவர்களை உறுப்பினராக கொண்ட சட்டத்தரணிகள் சங்கத்தலைவருக்கு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க மறுத்துள்ளனர். கடந்த காலங்களில் நாங்கள் என்ன செய்துள்ளோம்? சட்டத்தரணிகள் சங்கத்தின் யாப்பிற்குட்பட்ட வகையில் நாம் செயற்பட்டிருக்கிறோமா? சுட்டத்தரணிகள் சங்க யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நோக்கங்கள் என்னவென்பது குறித்து உங்கள் கவனத்தை திருப்ப விரும்புகிறேன்- இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் வகையில் ஒத்துழைப்பை வழங்குவது சுட்டத்தின் ஆட்சி மற்றும் நீதிபரிபாலனம் தொடர்பான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை கருத்திலெடுத்து, தேவைப்பட்டால் இது குறித்து அரசாங்கத்திற்கும்,அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு அமைப்புகளுக்கும் அறிக்கைகளை சமர்ப்பித்தல், நீதிமன்றங்கள் ஊடாக தலையீடு செய்தல். நீதிமன்றங்களை நாடுவதற்கான உரிமை மற்றும் சட்டத்தரணி ஒருவரை தனது சார்பில் நிறுத்துவதற்கான உரிமை உட்பட்ட மனித உரிமைகளையும் ஏனைய சுதந்திரங்களையும் ஊக்குவித்தல், பாதுகாத்தல், பின்பற்றுதல்.
நாங்கள் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்பட்டவேளை போராடியுள்ளோம் சட்டத்தின் ஆட்சிக்காக நாங்கள் போராடியுள்ளேம். உச்ச நீதிமன்றங்களுக்கான பொருத்தமான நியமனங்களுக்காக நாஙகள் போராடியுள்யோம். சிவில் சமூகத்தின் உரிமைகளை அதனை பாதுகாக்க வேண்டியவர்களே மீறியவேளை நாங்கள் சிவில் சமூகத்தினரின் கரிசனைகளை கவனத்திலெடுத்துள்ளொம்- அதற்காக குரல் எழுப்பியுள்ளோம். நீதி;த்துறையினரின் நலன்கள்- குறித்து மாத்திரம் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் ஒடுக்கப்பட்ட போதும் முறையிடுவதற்கான காரணங்கள் இருந்த போதும் நாங்கள் குரல் எழுப்பி உள்ளோம்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தற்போதைய தலைமையின் கீழ் நாங்கள் சட்டக் கல்வி தொடர்பான பல கருத்தரங்குகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். ரத்துப்பசுவலவில் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்ட போது அந்த மக்களுக்காக தலையீடு செய்தோம். வனாத்தமுள்ள, மினுவான்கொட, நிட்டம்புவ போன்ற பகுதி மக்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுத்தோம். மாத்தளை பெரிய புதைகுழி தொடர்பாகவும் பேருவளை, அளுத்கம, தர்கா நகரில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட போதும் நாங்கள் குரல் எழுப்பினோம். வட பகுதி மக்களுக்காகவும் நாங்கள் தலையீடு செய்தோம்.
10 000 யிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட அவர்களுடைய பூர்வீக காணிகள் வீடுகளுடன் அதிகாரிகளால் அபகரிக்கப்பட்ட வேளை அதற்கெதிராக குரல் கொடுத்தோம்.
நாங்கள் குரலற்றவர்களுக்காக குரல் கொடுத்துள்ளோம்!
நாங்கள் அதிகாரம் இல்லாதவர்களுக்காக குரல்கொடுத்துள்ளோம்!
பலவீனமான நிலையில் உள்ளவர்களின் பலமாக நாங்கள் இருந்துள்ளொம்! ஜனநாயகம் என்பது வலுவானவர்களுக்கான அதே வாய்ப்பை பலவீனமானவர்களுக்கும் வழங்குவது என நான் புரிந்து கொள்கிறேன் என்று மாகாத்மா காந்தி ஒரு முறை தெரிவித்தார். எமது அரச அமைப்பில் பொதிந்துள்ள ஆட்சிக்கான தகுதி இதுவே. புத்தர் 2 600 ஆண்டுகளுக்கு முன்னர் இதனை போதித்தார்.
நாங்கள் இந்த இலக்கிற்காக பாடுபட வேண்டும் என்றால் அதற்காக தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும் என்றால் அதற்கான ஒரு விலையை செலுத்த வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. அது ஒரு விலையா அல்லது பெரிய தியாகமா என்பது எங்களுக்குத் தெரியாது.
~~தேசிய கட்டமைப்புகள் அழிக்கப்படுவது குறித்த கண்ணீர் விட்டு அழுவதற்கு” எங்களுக்கு உரிமை இல்லையா?
பொதுச் சேவை ஆணைக்குழுவின் சுதந்திரம் எங்கே?
பொது நிர்வாகத்தின் சுதந்திரம் எங்கே?
சுதந்திரமான கல்விச் சேவை எங்கே?
சுதந்திரமான வெளிநாட்டுச் சேவை எங்கே?
சுதந்திரமான போலீஸ் சேவை எங்கே?
இவை யாவற்றுக்கும் அப்பால் சுதந்திரமான நீதித்துறை சேவை எங்கே?
எமது நிர்வாக கட்டமைப்புகளின் நிலையை விமர்சிப்பவர்கள் துரோகிகள் மாத்திரமே என சொல்லப்படுகின்றது. எனினும் நேசத்திற்குரிய நாட்டிற்காக நான் அழுகிறேன். நாங்கள் அழித்த இந்த கட்டமைப்புகளை ஒரு காலத்தில் மீண்டும் உருவாக்குவோம் என்ற நம்பிக்கையை நான் பற்றிப் பிடித்துள்ளேன். நாசிகள் தனது வீட்டுக் கதவை தட்டியப pன்னரே தனது கடந்த கால தவறுகளுக்காக வருந்திய ஜேர்மனியின் நாஜி எதிர்ப்பு தத்துவாதி-மார்ட்டின் நியோமெல்லர் போன்று நாங்கள் காத்திருக்கக் கூடாது.
நான் இதைச் சொல்கிறேன் அவர்கள் என்னைக் கொல்லளாம் எனது குரலை நசுக்க முடியாது. செய்தி கொண்டு வருபவனை கொல்லலாம் செய்தியை கொல்ல முடியாது. நாட்டிடம் இருந்து மன்னிப்புக் கோர வேண்டியவர்களின் கால்களில் வீழ்ந்து நான் மன்னிப்புக் கோரமாட்டேன். நெல்சன் மண்டேலா 1964 இல் ரிவோனியா விசாரணையில் இவ்வாறு தெரிவித்தார்.
எனது வாழ் நாளில் சகல மக்களும் ஐக்கியத்துடனும் சம வாய்ப்புடனும் வாழும் சுதந்திர ஜனநாயக சமூகம் குறித்து நான் கனவு கண்டுள்ளேன் என்றார். இந்தக் கொள்கைக்காகவே நான் வாழவும் அதனை சாதிக்கவும் விரும்புகிறேன்,
தேவைப்பட்டால் இந்த கொள்கைக்காக நான் மரணிக்கவும் தயாராகவுள்ளேன்.
நன்றி,
-தமிழ் உலகம்-
















