மேலும் அதிர்சி: மட்டு கொக்கட்டிச் சோலையில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு !

mannar_deadsமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளியில் உள்ள வயல் பகுதிகளில் இருந்து எழும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் பெயர் மற்றும் புகைப்படம் அழிந்த நிலையில் மீனவர் அடையாள அட்டையும் எரிந்த நிலையில் துவாய் மற்றும் சேட் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட எழும்பு மனிதரின் கை எழும்பாக இருக்கலாம் எனவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரியாழ் விசாரணைகளை மேற்கொண்டார். இந்த எழும்புகள் அண்மையில் இப்பகுதியில் மீட்கப்பட்ட மண்டையோட்டின் பகுதியாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply