இலங்கையில் இரண்டு தமிழ் எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி. ராஜபக்சேவின் அதிரடிக்கு காரணம் என்ன?

rajapakse-appointed-tamil-mps-ministersஇலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று திடீரென இரண்டு தமிழ் எம்.பிக்களை துணை மந்திரியாக நியமனம் செய்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலை அடுத்து தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்காக அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபா கணேசன் மற்றும் பி.திகாம்பரம் ஆகிய இரண்டு தமிழ் எம்.பிக்கள் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் துணை மந்திரியாக பதவியேற்றுக்கொண்டனர்.

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் எம்.பியான பிரபா கணேசன் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சராகவும், தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த திகாம்பரம் தேசிய தொழிலாளர்கள் யூனியன் துறை இணை அமைச்சராகவும் பதவியேற்றனர்.

பிரபா கணேசன் மற்றும் திகாரம் ஆகிய இருவரும் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் முறையாக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற பின்னர் ராஜபக்சேவின் அரசுக்குத் தங்கள் ஆதரவை இருவரும் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் பதவியேற்றுள்ள நிலையில், ராஜபட்சவின் அமைச்சரவையில் துணை அமைச்சர்களின் எண்ணிக்கை 42 ஆகியுள்ளது. அமைச்சரவையில் மொத்தம் 67 அமைச்சர்கள் உள்ளனர்.

வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி யுவா மாகாணத்தில் கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் உள்ள தமிழர்களின் வாக்குகளை கவருவதற்காக ராஜபக்சே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தமிழக மற்றும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: , ,

Leave a Reply