இலங்கை அகதிகள் வழக்கு விசாரணையில் ஐ.நா தலையிடலாம்!

ship-ausகான்பெராவில் ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த வழக்கில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த 157 புகலிடக் கோரிக்கையாளர்கள் கிருஸ்மஸ் தீவுக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை நாடு கடத்த அஸி. தீர்மானித்தாக கூறப்படுகின்றது. இந்த முயற்சிக்கு எதிராக புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

புகலிடக் கோரிக்கையாளர் விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் விசேட விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்தநிலையில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகலாரயம் இந்த வழக்கு விசாரணைகளில் தலையிடும் என எதிர்பார்ப்பதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பாக வாதிடுவோர் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா அமைப்புகள் இந்த வழக்கு விசாரணையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக புகலிடக்கோரிக்கையாளர்கள் சார்பாக வாதிடும் ஜோர்ஜ் நியுஹவுஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அவுஸ்திரேலியா நடுக்கடலில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களை மாத்திரமல்ல ஏனைய நாடுகளின் அணுகுமுறையையும் பாதிக்கின்றன. இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணையில் சர்வதேச உள்ளுர் மனித உரிமை, மனிதாபிமான அமைப்புகள் தலையிடலாம், அவுஸ்திரேலிய நீதிமன்ற வழக்குகளில் ஐ.நா தலையிடுவது புதிய விடயம், பலவீனமான நிலையில் உள்ள ஆண்கள் பெண்கள் குழந்தைகளை அவுஸ்திரேலியா நடத்தும் முறை குறித்த சர்வதேச கவலையை இது வெளிப்படுத்துகிறது, என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply