கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிகை நிருபர் ஒருவரின் தலையை கொய்து கொலை செய்த விவகாரம் உலகையே உலுக்கிய நிலையில் அவரை கொலை செய்வதற்கு முன்னர் அவரை விடுவிக்க பணயத்தொகையாக ரூ.800 கோடி கேட்டு மிரட்டியதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த Global Trust என்ற பத்திரிகையில் நிருபராக பணியாற்றிய James Foley என்ற பத்திரிகையாளர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வீடியோ இணையதளத்தில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த படுகொலைக்கு ஐ.நா, அமெரிக்க அதிபர் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கேமரூன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்ட James Foley கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பணிபுரிந்த பத்திரிகை அலுவகத்திலும், அவரது குடும்பத்தினர்களிடம் பணயத்தொகையாக ரூ.800 கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவலை Global Trust இதழின் தலைவர் Philip Falphny உறுதிப்படுத்தியுள்ளார்.பணம் கொடுக்க மறுத்ததால்தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பத்திரிகை நிருபரின் கழுத்தை அறுத்து கொலை செய்தவர் பிரிட்டனை சேர்ந்த பயங்கரவாதி என்றும் கூறப்படுகிறது.
















