38 வருடங்களாக ஒரே குழந்தையை வயிற்றில் சுமந்த அதிசய பெண். மருத்துவ உலகின் மாபெரும் ஆச்சரியம்.

baby_boy_girl38 வருடங்களாக கருவில் ஒரு குழந்தையை சுமந்து வந்த பெண் ஒருவருக்கு ஆபரேஷன் மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் வெளியே எடுத்தது குழந்தையை அல்ல. குழந்தையின் எலும்புக்கூடு என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.

இந்தியாவில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு ஜோதிகுமார் என்ற 24 வயது பெண் கர்ப்பமானார். அவர் மருத்துவரிடம் சென்று சோதனை செய்தப்போது குழந்தை கர்ப்பப்பைக்கு வெளியே வளர்ந்து வருவதாகவும் உடனடியாக வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்க வேண்டும் என்றும், அல்லது தாயின் உயிருக்கும் ஆபத்து நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். ஆனால் ஜோதிகுமார் தன்னுடைய கிராமத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் குழந்தையை கலைக்க மருந்து சாப்பிட்டுவிட்டு, தன்னுடைய கர்ப்பம் கலைந்துவிட்டதாக முடிவு செய்து அப்படியே விட்டுவிட்டார்.

தற்போது சில நாட்களுக்கு முன்னர் கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டபோது, அவருடைய வயிற்றை எக்ஸ்ரே எடுத்த பார்த்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் 38 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை கூறினார். அதன்பின்னர் மருத்துவர்கள் சர்ஜரி செய்து குழந்தையின் எலும்புக்கூடுகளை அகற்றி ஜோதிகுமாரை காப்பாற்றியுள்ளனர். தற்போது 62 வயதாகும் ஜோதிகுமாரின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், மருத்துவ உலகில் இதுவரை இல்லாத ஒரு புதுமை இது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒரு பெண் தனது கர்ப்பப்பையில் 18 வருடங்களாக ஒரு குழந்தையை சுமந்திருந்தார் என்பதுதான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஜோதிகுமார் முறியடித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply