இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: டெல்லியும் அதிர்ந்தது

feltஇமாச்சல பிரதேசத்தில் இன்று மதியம் 1.41 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தையடுத்து டெல்லியில் அதிர்வுகள் உணரப்பட்டன. இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று மதியம் 1.41 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் சம்பா-காங்ரா மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. பலம்பூர் மற்றும் தரம்சாலாவில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர். இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லியில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம் தவிர அஸ்ஸாம் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சோனிட்பூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.

Tags: , ,

Leave a Reply