ராஜபக்ஷ குடும்பம் முட்டாள்களின் கூடாரம்.. : சரத் பொன்சேகா கடும் தாக்கு.

sarath-fonsekaஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட ராஜபக்ஷவினரின் குடு்ம்பம், முட்டாள்களின் கூடாரம் என சரத்பொன்சேகா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு, பதுளையில் ஜனநாயக தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ராஜபக்ஷ குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னொரு காலத்தில் இலங்கை ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியான நாடாக விளங்கியது. நாடு அபிவிருத்திப் பாதையில் சென்றது. இன்று நாடு பின்தள்ளப்பட்டுவிட்டது. ஆசியாவின் வறுமை மிகுந்த நாடுகள் வரிசையில் கடைசி ஐந்து இடங்களுக்குள் இலங்கை தள்ளப்பட்டு விட்டது.

இன்றைய நிலையில் நாடு பொருளாதாரத்தில் சீரழிந்து கொண்டிருக்க, ராஜபக்ஷ குடும்பம் மட்டும் பொருளாதாரத்தில் செழித்துக் கொண்டிருக்கின்றது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் மிக முட்டாள்தனமான துறைமுகங்களில் ஒன்றாகும். அதனை உருவாக்கியவர்கள் முட்டாள்களின் கூடாரத்தில் இருப்பவர்கள் தான். ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கை மாற்றப்படாவிட்டாலும் பரவாயில்லை. கேவலமான பொருளாதார மற்றும் அபிவிருத்தி நிலைக்குத் தள்ளப்படாமல் இருந்தாலே போதுமானது என்றும் சரத் பொன்சேகா தனது உரையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply