சூர்யாவை பழிக்குபழி வாங்கிய விஜய்

suryaநடிகர் விஜய் இயக்குனர் பார்த்திபனை நேரில் சந்தித்து அண்ணா, “உங்க ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை பார்த்தேன் சூப்பருங்கண்ணா” என வாழ்த்தினார். இந்த செய்தி அனைத்து மீடியாக்களிலும் வெளியாகியது. விஜய்யின் வாழ்த்து செய்தியால் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு இன்னும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. ஆனால் பார்த்திபனை, விஜய் வாழ்த்தியதை கேள்விப்பட்ட சூர்யா கோபமடைந்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான படங்களில் அஞ்சான் படுதோல்வியை தழுவியது. அஞ்சான் மொக்கை படம் என்பதால், எல்லோரும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கு சென்றுவிட்டனர். மீடியாக்களும் அஞ்சான் படத்தை கழுவி, கழுவி ஊற்றியது. இதனால் சூர்யா கண்ணீர் விட்டு கதறிவிட்டார். ஏற்கனவே படம் சரியில்லை என அனைவரும் கூறி வரும் நிலையில் விஜய் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் நல்ல படம் என கூறியுள்ளார். இதன் மூலம் அஞ்சான் மொக்கை படம் என்பதை விஜய் மறைமுகமாக வெளிபடுத்தியுள்ளார். இதனால் தான் சூர்யா செம்ம கடுப்பில் உள்ளார்.

ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார், வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்து பார்க்கமுடியாது என சூர்யா சில வாரங்களுக்கு முன் பேட்டி கொடுத்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு தான், சூர்யாவை பழிதீர்த்துள்ளார் விஜய்.

Tags: , ,

Leave a Reply