ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்படும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் மாதம் ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார். இலங்கை அரசாங்கத்தை தடை செய்யுமாறு ருத்ரகுமாரன், ஐக்கிய நாடுகள் அமைப்பிச் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கோரியிருந்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலத்திற்கு எதிரில் இலங்கைக்கு எதிராக எதிர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சாட்சியங்களை திரட்ட நேரடி அனுமதியை இலங்கை வழங்க மறுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பின்பொறிமுறைமையைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக ருத்ரகுமாரன், பான் கீ மூனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















