இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளை காத்திரமான முறையில் முன்னெடுக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு சில ஏற்பாடுகளை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
விசாரணைகளுக:கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் விசாரணை நிபந்தனைகளை மாற்றி அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டிக் கொள்வது தொடர்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நம்பகமான ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதென ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சாட்சியங்களை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைக் குழுக்கள் பயன்படுத்திய நியதிகள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
















