வட மாகாண மக்களின் குறிப்பாக இன்றைய இளையோரின் பிரச்சினைகளுக்கு யார் பொறுப்பு? என்கிற வழக்குடன் மக்களின் தீர்ப்புக்காக யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் காண்பிக்கப்பட்டு வருகின்றது சிம்மாசனங்களில் குற்றவாளிகள் என்கிற தெருவெளி நாடகம்.
இந்நாடகத்தை துறை சார்ந்த நிபுணர் எஸ். பாலசிங்கம் எழுதி, இயக்கி உள்ளார். நடிகர்கள் அனைவரும் இளையோர்கள் ஆவர்.
மக்களின் இன்றைய அவலங்கள் குறிப்பாக இளையோரின் அவஸ்தைகள் தீராப் பிரச்சினைகளாக ஆக்கப்பட்டு இருப்பதை இந்நாடகம் மிக நுட்பமாக காட்டுகின்றது.
வட மாகாண கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல், பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோருக்கு இந்நாடகம் விசேடமாக போட்டுக் காட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.
















