உலகின் மிக மோசமான மனிதர்கள் பட்டியலில் 26வது இடம் பிடித்த ராஜபக்சே. முதலிடம் ஸ்டாலின்

Mahinda-Rajapaksa1வரலாற்றுக்காலம் தொடங்கி இதுநாள் வரை வாழ்ந்த மனிதர்களில் மிக மோசமான மனிதர்கள் குறித்த ஒரு சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. உலக அளவில் பிரபலமான ஒரு இணையதளம் எடுத்த இந்த பட்டியலில் இலங்கை அதிபர் ராஜபக்சே 26 வது இடம் பிடித்துள்ளார்.

உலக அளவில் பிரபலமான தி.ருன்கர் என்ற அமைப்பு உலகின் மிக மோசமானவர்கள் குறித்த ஒரு சர்வே எடுத்தது. இந்த சர்வேயில் முதலிடத்தில் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின், இரண்டாமிடத்தில் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் ஆகியோர் உள்ளனர். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அதிபராக இருக்கும் மகிந்த ராஜபக்சே இந்த கொடுமைக்காரர்கள் வரிசையில் 25வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சர்வேயில் முதல் பத்து இடங்களில் போல்போட், இடி அமீன், மாசேதுங், ஒசாமா பின்லேடன், கிம் ஜோன் ஹில், ஹென்ரிச் ஹிம்லர், சதாம் உசேன், போனிட்டோ முசோலினி ஆகியோர் உள்ளனர்.

தரவரிசையில் 26வது இடம் பெற்றிருக்கும் ராஜபக்சே குறித்து அந்த இணையதளம் கருத்து கூறுகையில் உலகில் உள்ள அனைத்து கெட்ட கெடுதிகளையும் செய்தும், செய்து கொண்டும் இருக்கும் நபர் இவர் என்றும், நியாயப்படி இவர்தான் இந்த சர்வேயில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தகுதி படைத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த பட்டியலில் கோத்தபயா ராஜபக்சே 32வது இடத்திலும், சோனியா காந்தி 34 வது இடத்திலும் அமெரிக்க அதிபர் ஒபாமா 43வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்வேயின் முழுப்பட்டியலையும் பார்க்க

http://www.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history?format=GRID

Tags: ,

Leave a Reply