இளம்பெண்ணின் மார்பில் ஓட்டை போட்ட ஐபோன். இங்கிலாந்து நாட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

girl-iphoneஇங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு இளம்பெண் ஒருவர் ஐபோன் ஒன்றால் தனது மார்பகத்தில் ஓட்டை ஏற்பட்டு கடும் அவஸ்தையில் இருக்கின்றார்.

இங்கிலாந்தில் உள்ள Essex என்ற நகரை சேர்ந்த 24 வயது இளம்பெண் Dionne Baxter என்பவர் நான்கு மாத குழந்தை ஒன்றுக்கு தாயாக இருப்பவர். இவர் நேற்று தனது வீட்டில் தூங்கும்போது தனது ஐபோனை சார்ஜில் போட்டுவிட்டு படுக்கையின் அருகில் ஐபோனை வைத்துவிட்டு தூங்கிவிட்டார். திடீரென வெடிகுண்டு வெடித்தது போன்ற ஒரு சத்தம் கேட்டு Dionne Baxter விழித்து பார்த்தபோது தனது மார்பகத்தில் பயங்கரமாக ரத்தம் வருவது கண்டு திடுக்கிட்டார்.

சார்ஜில் போட்டவாறே படுக்கையில் வைத்திருந்த ஐபோன் மீது Dionne Baxter புரண்டு படுத்துள்ளார். அந்த சமயத்தில் ஐபோன் திடீரென வெடித்ததால் அவருடைய மார்பில் துளை ஏற்பட்டு கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரை பரிசோதித்த டாக்டர் அவரது மார்பில் அறுவை சிகிச்சை செய்து கடுமையாக சேதம் அடைந்திருந்த அவரது மார்புக்காம்பை அகற்றிவிட்டதாக கூறியுள்ளார். நான்கு மாத குழந்தைக்கு தாயாக இருக்கும் அவர் இனிமேல் அந்த மார்பகத்தின் மூலம் பால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். Dionne Baxter அவர்கள் ஐபோனின் ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்தாமல் சந்தையில் குறைந்த விலைக்கு கிடைத்த மாற்று சார்ஜரை பயன்படுத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதை இங்கிலாந்து போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

Tags: ,

Leave a Reply