வவுனியாவில் காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடித்து தருமாறு கோரி பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

Vauniya-1காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடித்து தருமாறு கோரி பேரணியும் மாபெரும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 30 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக வவுனியா பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் வை.தேவராசா கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல்போனோர் தினமாகும். இந்த தினத்தில் எமது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் காணாமல்போனோரின் உறவுகளை ஒன்றிணைத்து மாபெரும் பேரணி ஒன்றினையும் பொது கூட்டத்தையும் நடத்த தீர்மானித்துள்ளோம்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிரஜைகள் குழுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா நகரசபை வரை பேரணியும் அதனைத் தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு ஜனாதிபதிக்கும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.

இதில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply