சுவிசில் காதலியை கொலைசெய்தவர் 13 ஆண்டுகளின் பின் நியூசிலாந்தில் கைது!

arrestகடந்த 2000 ஆம் ஆண்டு சுவிஸில் தனது முன்னாள் காதலியான 23 வயது நிரம்பிய கவிதா கந்தையா என்ற இளம் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, போலி ஆவணங்களுடனும் நியூஸிலாந்துக்குள் நுழைந்து, அங்கு பிரஜாவுரிமை பெற்று வசித்து வந்த தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரே ஒக்லண்ட் காவல்துறையினர் இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்று ஒக்லண்ட் மாவட்ட நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுவிஸில் வசித்து வந்தவ இவர் 2000 டிசம்பரில் தனது காதலியான 23 வயது இளம் பெண்ணைக் கொலை செய்து விட்டு 2001 பெப்ரவரியில் போலியான அடையாளப்படுத்தல் மற்றும் பயண ஆவணங்களுடன் நியூஸிலாந்துக்குள் நுழைந்து, 2004 ஆம் ஆண்டு அந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags: , ,

Leave a Reply