உல்லாச திருமணத்திற்காக யாழ் படையெடுக்கும் கனடா, லண்டன் மாப்பிள்ளைகள்

sex25யாழ்ப்பாண மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர். காரணம் திருமணம் செய்கின்றோம் என்று கனடா மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் மாப்பிள்ளைமார்கள் உண்மையாகவே திருமணம் செய்ய செல்லவில்லை. தங்கள் உல்லாச களியாட்ட தேவைகளிற்கு அப்பாவி பெண்களை பலியாக்கும் நோக்குடன் திருமணம் என்ற பந்தத்தை கொச்சைப்படுத்தி தங்கள் பசிகளை தீர்த்துக்கொள்ள சில தமிழ் இளைஞரகள் புறப்பட்டுள்ளனர்.

கடந்த 6-மாதங்களில் மட்டும் சுமார் 8 இவ்வாறான போலி பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றமை பலர் அறிந்த விடயம். வெளி உலகிற்கு தெரியாமல் மேலும் பல நடந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.

கனடா மற்றும் லண்டன் போன்ற இடங்களில் இருந்து வெளியாகும் பல இலவச பத்திரிகைகளில் மணமகள் மணமகன் தேவை என்ற விளம்பர பக்கம் உள்ளது. இதில் வெளியாகும் விளம்பரங்களை மேற்குறிப்பிட்ட நாடுகளில் வசிக்கும் துணிச்சலான இளைஞர்கள் சிலர் பார்த்து ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதோடு அப்பாவிப் பெண்களை ஏமாற்றி தங்களது காமப் பசியை தீர்த்துக் கொள்கின்றனரெனவும் அறியப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்களிற்கு மணமகன்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்க்கும் சில இளைஞர்கள் அங்குள்ள நபர் ஒருவரின் உதவியுடன் பெண்ணின் பெற்றோரை தொடர்புகொள்ள செய்கின்றனர். பின்னர் பெண்ணின் பெற்றோருடன் பேசி யாழ்ப்பாணம் வந்து பெண் பார்ப்பதாக பெற்றோரை சம்மதிக்க வைக்கின்றனர். வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற பேராசையில் பெற்றோரும் தீர விசாரிக்காது சம்மதிக்கின்றனர்.

இதன் பின்னர் நடப்பவைகள் தான் அதிர்ச்சியான இரத்தத்தை உறையவைக்கும் சம்பவங்கள். யாழ்ப்பாணம் செல்லும் வெளிநாட்டு மாப்பிளை பெண்ணின் பெற்றோருடன் நல்ல விதமாக பேசி பெண்பார்க்கும் படலம் இடம்பெறும். பின்னர் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் தங்களது தந்திரங்களை பிரயோகிக்க ஆரம்பிக்கின்றனர். தங்களது பெற்றோர்களிற்கு பெண்ணை பிடிக்கவில்லை இருந்தாலும் தனக்கு பெண்ணை பிடித்து விட்டது திருமணம் செய்து கொள்கின்றேன் என்ற ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். சில பெற்றோர்கள் இதை அப்படியே நம்பி விடுகின்றனர்.

வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் பதிவுத் திருமணத்தை செய்து விட்டு தான் வெளிநாடு திரும்ப நினைப்பதாக மாப்பிள்ளை கூறுவார். அதுமட்டுமின்றி கலியாணத்தை பிரமாண்டமாக நிகழ்த்தலாம் பதிவை அதிக கூட்டமின்றி செய்யும் படியும் சொல்வார். வெளிநாட்டு மாப்பிளைக்கு ஆசைப்பட்ட பெற்றோர் அவரின் விருப்பத்தின் படி பதிவுத்திருமணத்தை முடித்து விடுகின்றனர். மாப்பிள்ளை சார்பில் எவரும், மாப்பிள்ளையின் நண்பர்கள் கூட பதிவுத்திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்.

பதிவுத் திருமணம் இவ்வாறு நடந்து முடிந்தவுடன் தான் சில நாட்கள் தான் யாழ்ப்பாணத்தில் இருப்பேன் அதனால் சில இடங்களை சுற்றிப்பார்க்க விரும்புகின்றேன் என கூறி பெண்ணையும் அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை சுற்றுலா சென்று விடுவார். இவர்களிற்கு வசதியாக சில விடுதிகளும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன.

அந்த விடுதிகளில் தங்கி தங்களது ஆசைகள் உடற்பசிகளை எல்லாம் அவர்களை நம்பி வந்த பெண் மூலம் தீர்த்து விட்டு வெளிநாடு திரும்பி விடுகின்றனர். மாப்பிள்ளை வருவார் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவார் என பெண்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர்.

ஆனால் மாப்பிள்ளை வெளிநாடு திரும்பி வந்து தனது சக நண்பர்களிடம் தாங்கள் செய்துவிட்ட இந்த வெட்க கேடான அருவருப்பான கொடிய சம்பவம் பற்றி பெருமை பேச அந்த கூட்டத்தில் இருக்கும் வேறு சிலரும் ஏன் நாமும் இதை பின்பற்ற கூடாதென நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நண்பன் செய்தது தவறு அவர்களுக்கு ஒரு பெண் சகோதரி இருந்து அவளுக்கும் இவ்வாறு நடந்திருந்தால்…என சிந்தித்துப் பாராது தாங்களும் இவ்வாறு தவறு செய்ய நினைப்பது வழக்கமாகி விட்டுள்ளது.
பெண்களின் பெற்றோர்களும் சிந்திக்க தவறி விடுகின்றனர். வெளிநாட்டு மாப்பிளை சீதனம் எதுவும் கேட்கவில்லை என்றதும் கொஞ்சம் கூட சிந்திக்காது பெற்றோர்களும் சம்மதிக்கின்றனர்.

வெளிநாட்டு மாப்பிளை என்ற பேராசையில் தீர விசாரிக்காது தங்கள் சொந்த பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்க துணியும் பெற்றோர்களை என்ன சொல்வது?

இனிமேலாவது தங்கள் பெண்பிள்ளைகளை இவ்வாறு தீர விசாரிக்காது வெளிநாட்டு மோசடி மாப்பிளைகளின் கைகளில் ஒப்படைத்து ஏமாறாது இருக்கும் படி யாழ் பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

Tags: , ,

Leave a Reply